Headlines

கெலமங்கலத்தில சட்டவிரோத லாட்டரி விற்பனை : போலீசார் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

கெலமங்கலத்தில சட்டவிரோத லாட்டரி விற்பனை : போலீசார் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட நெம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் தினக்கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் இந்த லாட்டரி மோகத்தில் விழுந்து தங்களது அன்றாட வருமானத்தை இழந்து வருகின்றனர்.

இதன் மூலம் குடும்பங்களில் தகராறு ஏற்படுவதோடு, அவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. எனவே கடைவீதிகள், பேருந்து நிலையம் பகுதிகள்,தேநீர் கடைகள் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களில் வாட்ஸ்அப் மற்றும் காகிதக் குறிப்புகள் மூலம் ரகசியமாக இந்த விற்பனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

கெலமங்கலம் மற்றும் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸார் கண்காணித்து சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்வேறு இடங்களில் நாளுக்குநாள் லாட்டரி விற்பனை அதிகரித்து வரும்நிலையில், போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *