Headlines
பூந்தமல்லி அருகே புத்தக கடையில் தீ விபத்து : மின் கசிவால் விபரீதம்

பூந்தமல்லி அருகே புத்தக கடையில் தீ விபத்து : மின் கசிவால் விபரீதம்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கவிச்செல்வி இவர் காட்டுப்பாக்கம், பஜனை கோவில் தெருவில் பல ஆண்டுகளாக நோட்டு, புத்தகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்தவர் தனது இரண்டு செல்போன்களை கடைக்குள் சார்ஜர் போட்டுவிட்டு அருகில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது கடையிலிருந்து அதிக அளவில் புகை வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் கடைக்குள் எரிந்து கொண்டிருந்த தீயை…

Read More
குளித்தலை அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் : மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு

குளித்தலை அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் : மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு

கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே வரவனை ஊராட்சி பாப்பனம்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த  பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து கடவூர் தாசில்தார் பானுமதி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள்,சிந்தாமணிப்பட்டி போலீசார்,நில அளவையர் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா? என்று அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் உள்ள பகுதியை ஜேசிபி இயந்திரத்தை…

Read More
சிங்கப்பெண் படை எங்கே? வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி

சிங்கப்பெண் படை எங்கே? வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும், அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும்,பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில்,சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர்…

Read More
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது கடினம் -டி.கே.சிவக்குமார்

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது கடினம் -டி.கே.சிவக்குமார்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து விட்டது, மழையும் தற்போது இல்லை; எங்களிடம் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு வழங்குகிறோம். அணைகளில் போதிய நீர் இல்லாததால், தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் திறப்பது கடினம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Read More
தவெக எம்எல்ஏ மீது பொதுமக்கள் கல்வீச்சு : சூலூரில் பரபரப்பு

தவெக எம்எல்ஏ மீது பொதுமக்கள் கல்வீச்சு : சூலூரில் பரபரப்பு

கோவை மாவட்டம், சூலூர் அருகே நாகம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் குட்டையை தூர்வாரி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தூர்வாரும் பணியை துவக்கி வைக்க வந்த சூலூர் தவெக எம்எல்ஏ எம். என். சுகுமாரை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் உடன் வந்த கட்சிக்காரர்கள் முன்னிலையில் எம்எல்ஏ தூர்வாரும் பணிக்கு பூமி பூஜை போட்டார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் கூட்டத்தில் இருந்து எம்எல்ஏ மீது…

Read More
வீடு,பயிர்களை சூறையாடிய காட்டு யானை : வனத்துறை - பொதுமக்கள் வாக்குவாதம்

வீடு,பயிர்களை சூறையாடிய காட்டு யானை : வனத்துறை – பொதுமக்கள் வாக்குவாதம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி கிராமத்தில், விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்தது. விவசாயி கங்காதரன் மற்றும் அவரது மனைவி, விவசாய நிலத்தில் உள்ள வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது, நாய்கள் அலறும் சத்தம் கேட்டு எழுந்துள்ளனர். அப்போது வீட்டின் அருகே யானை நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடியுள்ளனர். தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்த யானை, வீட்டை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த நெல் மற்றும் அரிசியையும் சாப்பிட்டுள்ளது. தகவலறிந்து வந்த பேரணாம்பட்டு வனத்துறையினர்,…

Read More
பொள்ளாச்சி டாஸ்மாக் கடையில் கூடுதல் பணம் வசூல் : ஆதாரங்களுடன் புகார் அளித்த சமூக ஆர்வலர்

பொள்ளாச்சி டாஸ்மாக் கடையில் கூடுதல் பணம் வசூல் : ஆதாரங்களுடன் புகார் அளித்த சமூக ஆர்வலர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடையில், மதுபாட்டிலின் விலையைவிட கூடுதலாக பணம் வசூலித்ததாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது ஊழியர் ஆணவமாக பதிலளித்ததாகவும் கூறி வாடிக்கையாளர் ஒருவர் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். பொள்ளாச்சி குரும்பபாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவர் அளித்துள்ள புகாரில், கடந்த 24.9.2026 அன்று இரவு 8.34 மணியளவில் பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை எண் 2043-க்கு மதுபானம் வாங்கச்…

Read More
தோட்டத்திற்கு வந்த அரியவகை நட்சத்திர ஆமை: வனத்துறையிடம் ஒப்படைப்பு

தோட்டத்திற்கு வந்த அரியவகை நட்சத்திர ஆமை: வனத்துறையிடம் ஒப்படைப்பு

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் வீட்டு தோட்டத்தில் நடமாடிய அரியவகை நட்சத்திர ஆமையை வீட்டின் உரிமையாளர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மாரண்டஅள்ளி பாலசுப்பிரமணியம் தெருவைச் சேர்ந்தவர் ராமன். இவர் நேற்று தனது வீட்டு தோட்டத்தில் செடிகளை கவனித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ஏதோ ஒன்று மெதுவாக ஊர்ந்து செல்வதை கண்டார். அருகில் சென்று பார்த்தபோது, முதுகில் அழகான நட்சத்திர வடிவ கோடுகளுடன் கூடிய ஆமை ஒன்று இருப்பது தெரியவந்தது. இது சாதாரண ஆமை அல்ல, அரியவகை நட்சத்திர ஆமை…

Read More
பறக்கும் படையினர் வாகன சோதனை : ரூ.1.84 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையினர் வாகன சோதனை : ரூ.1.84 லட்சம் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சந்திராபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு நேரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை முறைகேடாக விநியோகிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சந்திராபுரம் பகுதியில் எப்.எஸ்.டி-3 ஏ-பறக்கும் படையினர் அதிகாலை நேரத்தில்…

Read More
கோவை : பழுது பார்க்கும் பணியின்போது 108 ஆம்புலன்ஸ் தீப்பபற்றி எரிந்து சேதம்

கோவை : பழுது பார்க்கும் பணியின்போது 108 ஆம்புலன்ஸ் தீப்பபற்றி எரிந்து சேதம்

கோவை கோவில்மேடு கிழக்கு, கே.கே. புதூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமியின் மகன் பகவத்சிங் (57), கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் வி ஏ எம் – பி எஸ் கே என்ற பெயரில் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க்சாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் பழுது பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை வழக்கம்போல் பணிகளைத் தொடங்கி, ஊழியர்களுடன் வாகனங்களை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். மதியம்…

Read More