பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கவிச்செல்வி இவர் காட்டுப்பாக்கம், பஜனை கோவில் தெருவில் பல ஆண்டுகளாக நோட்டு, புத்தகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்தவர் தனது இரண்டு செல்போன்களை கடைக்குள் சார்ஜர் போட்டுவிட்டு அருகில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது கடையிலிருந்து அதிக அளவில் புகை வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அக்கம், பக்கத்தினர் கடைக்குள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிந்ததையடுத்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடைக்குள் எரிந்து கொண்டிருந்த தீயை முற்றிலும் அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் கடைக்குள் இருந்த நோட்டு, புத்தகங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது தெரிய வந்தது. செல்போன்களை சார்ஜர் போட்ட போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், மேலும் தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
