Headlines

தவெக எம்எல்ஏ மீது பொதுமக்கள் கல்வீச்சு : சூலூரில் பரபரப்பு

தவெக எம்எல்ஏ மீது பொதுமக்கள் கல்வீச்சு : சூலூரில் பரபரப்பு

கோவை மாவட்டம், சூலூர் அருகே நாகம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் குட்டையை தூர்வாரி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தூர்வாரும் பணியை துவக்கி வைக்க வந்த சூலூர் தவெக எம்எல்ஏ எம். என். சுகுமாரை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் உடன் வந்த கட்சிக்காரர்கள் முன்னிலையில் எம்எல்ஏ தூர்வாரும் பணிக்கு பூமி பூஜை போட்டார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் கூட்டத்தில் இருந்து எம்எல்ஏ மீது கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *