Headlines

TCD Newsroom

ஆப்பு வைத்த ஆன்லைன் ஆப் நட்பு – வாலிபரை தாக்கி வழிப்பறி

ஆப்பு வைத்த ஆன்லைன் ஆப் நட்பு – வாலிபரை தாக்கி வழிப்பறி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, சமூக வலைதள ஆப் மூலம் ஏற்பட்ட தொடர்பில் வாலிபர் ஒருவர் தாக்கப்பட்டு பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து.30,. இவர் குறிப்பிட்ட சமூக வலைதள ஆப் மூலம் அறிமுகமான நபர்களை சந்திக்க உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவரை மதியனூர் அருகே உள்ள விமான ஓடுதளம் பகுதிக்கு அழைத்துச் சென்ற மர்ம நபர்கள், அவரை தாக்கி 2 ஆயிரம் ரூபாய் பணத்தை…

Read More
சர்ச்சைக்குரிய பகுதியில் விநாயகர் ஊர்வலம் : குவிக்கப்பட்ட போலீஸ் படை

சர்ச்சைக்குரிய பகுதியில் விநாயகர் ஊர்வலம் : குவிக்கப்பட்ட போலீஸ் படை

திண்டுக்கல் சர்ச்சைக்குரிய குடைபாறைப்பட்டி பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் ,காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 600 போலீசார் பாதுகாப்புடன் அமைதியான முறையில் திண்டுக்கல் பெரிய பள்ளிவாசலை கடந்து சென்றது. திண்டுக்கல் குடைபாறைப்பட்டி பகுதியில் இருந்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் வழியாக ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்தது. தற்போது 15 ஆண்டுகாலமாக குடை பாறை பட்டியிலிருந்து புறப்பட்டு செல்லும் விநாயகர் இஸ்லாமியர்கள்…

Read More
கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் ஜீப்பால் விபத்து : இருவர் காயம்

கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் ஜீப்பால் விபத்து : இருவர் காயம்

திருப்பத்தூர் பிரதான சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து இருசக்கர வாகனத்தின் மீது மகளிர் காவல் நிலைய வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் இருவர் காயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுப்பேட்டை ரோடு பகுதியில் மகளிர் காவல் நிலைய வாகனம் இன்று காலை சென்றபோது திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேகமாக சென்று தொடர்ச்சியாக அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள்…

Read More
அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை நிறைவு - 18ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை நிறைவு – 18ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனர். தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தனியார் பள்ளி சங்கத் தலைவர்…

Read More
காலி மதுபாட்டிலுக்கு 5 ரூபாய் தான் : டாஸ்மாக் ஊழியர்கள் புது ரூல்ஸ்

காலி மதுபாட்டிலுக்கு 5 ரூபாய் தான் : டாஸ்மாக் ஊழியர்கள் புது ரூல்ஸ்

மதுபாட்டில்களை பொது இடங்கள், விவசாய நிலங்களில் வீசுவதை தவிர்க்க டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் வசூலித்து காலி மதுபாட்டிலை திரும்ப தரும்போது அந்த 10 ரூபாயை வழங்கும் திட்டம் கடந்த திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வசூல் செய்த தொகையிலும் கமிஷன் அடிக்கும் டாஸ்மாக் ஊழியர்களின் நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மதுபான கடையில் மது வாங்கிய மது…

Read More
டெண்டர் முறைகேடு புகார் : தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

டெண்டர் முறைகேடு புகார் : தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தாம்பரம் மாநகராட்சியில் செய்து முடித்த ரூ.45 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு மீண்டும் ஒப்பந்தம் விடபட்டதால் மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்த தாம்பரம் அருகே புது பெருங்களத்தூர் ரவுண்டானாவில் தாம்பரம் மாநகராட்சி சார்பில் ரூ. 27 லட்சம் மதிப்பீட்டில் அசோகா தூண் அமைக்கபட்டு அதனை அமைச்சர் சரத்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் ஆகியோர் ஜூலை 29 ம்தேதி திறந்து வைத்தனர். அதேபோல் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் சிட்லபாக்கம் ஏரி…

Read More
அன்பில் மகேஸ் உறவினர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

அன்பில் மகேஸ் உறவினர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

​தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உறவினர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். ​கடந்த திமுக ஆட்சியில் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகவும் வகித்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் இவர் தோல்வியடைந்தார். இந்நிலையில், இவரது பதவிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்ததில் நிதி…

Read More
முதலமைச்சர் ஹிட்லர், அமைச்சர்கள் கோயபல்ஸ்கள் :அன்பில் மகேஸ் பொய்யாமொழி

முதலமைச்சர் ஹிட்லர், அமைச்சர்கள் கோயபல்ஸ்கள் :அன்பில் மகேஸ் பொய்யாமொழி

முதலமைச்சர் ஹிட்லராகவும், அவருடைய அமைச்சர்கள் கோயபல்ஸாகவும் (Goebbels) செயல்பட்டு வருகிறார்கள். இதனை நாங்கள் சாடுவதால் எங்கள் மீது திட்டமிட்டு இத்தகைய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,ஒரு உதவி ஆணையர் மற்றும் ஒரு ஆய்வாளர் உள்ளிட்ட சுமார் 20 போலீஸார் எனது வீட்டில் சோதனை நடத்தினார்கள். என்னிடம் எவ்வித விசாரணையும்…

Read More
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகள்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகள்

யுபிஐ வணிக பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகள் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அமலாகிறது என ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி,தனிநபர்களுக்கு இடையேயான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. ரயில்வே, தொலைத்தொடர்பு சேவைகள், காப்பீடு, எரிபொருள் போன்ற குறிப்பிட்ட வணிக பிரிவுகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2,000-க்கு மேற்பட்ட வர்த்தக UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும்.ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச வர்த்தக கட்டணமாக ரூ.300-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்.15 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட…

Read More
அதிவேகத்தால் நேர்ந்த சோகம் : பரபரப்பு சிசிடிவி

அதிவேகத்தால் நேர்ந்த சோகம் : பரபரப்பு சிசிடிவி

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விதுரா பகுதியில் வளைவான சாலையில் அசுர வேகத்தில் வந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஞாயிற்றுகிழமை மாலை பொன்முடி சென்று மூன்று பேருடன் திரும்பிய காரை ரஞ்சித் என்பவர் அசுர வேகத்தில் ஓட்டி சென்ற நிலையில் விதுரா பகுதியிலுள் வளைவான…

Read More