Headlines

கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் ஜீப்பால் விபத்து : இருவர் காயம்

கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் ஜீப்பால் விபத்து : இருவர் காயம்

திருப்பத்தூர் பிரதான சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து இருசக்கர வாகனத்தின் மீது மகளிர் காவல் நிலைய வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் இருவர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுப்பேட்டை ரோடு பகுதியில் மகளிர் காவல் நிலைய வாகனம் இன்று காலை சென்றபோது திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேகமாக சென்று தொடர்ச்சியாக அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனம் ஒன்று சினிமா பாணியில் பறந்து சென்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாட்றம்பள்ளி நாராயணபுரம் பகுதியை சேர்ந்த கண்ணப்பன் மகன் திருப்பதி (39) குடியாத்தம் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி ( 57) ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியில் திடீரென போலீஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துறை சார்ந்த அதிகாரிகள் வாகனத்தை அவ்வப்போது பழுது பார்த்து வாகனத்தை பராமரிக்க வேண்டும் எனவும் வாகனத்தை பராமரிக்காமல் விட்டதே இந்த விபத்துக்கு காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *