கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விதுரா பகுதியில் வளைவான சாலையில் அசுர வேகத்தில் வந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஞாயிற்றுகிழமை மாலை பொன்முடி சென்று மூன்று பேருடன் திரும்பிய காரை ரஞ்சித் என்பவர் அசுர வேகத்தில் ஓட்டி சென்ற நிலையில் விதுரா பகுதியிலுள் வளைவான சாலையில் அசுர வேகத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறமாக சென்று எதிரே ஷைஜூ என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகத்துடன் தூக்கி வீசப்பட்ட ஷைஜூ மற்றும் அவரது உறவினர் படுகாயமடைந்த நிலையில் கார் மீண்டும் இடது புறமாக சென்று சாலையோர சுவரில் மோதி நின்றது
இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஷைஜூ மற்றும் அவரது உறவினரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த ஷைஜூ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த விதுரா போலீஸார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அசுர வேகத்தில் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான பத பதைக்கும் சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
