Headlines

மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்வதற்கு என்ன தடை? – அரசுக்கு திருமாவளவன் கேள்வி

மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்வதற்கு என்ன தடை? – அரசுக்கு திருமாவளவன் கேள்வி

அன்னை மீனாட்சி தமிழுக்கான அடையாளமாக மக்கள் நம்புகிறார்கள். அதேபோல சிவபெருமானையும் தமிழ் சங்கத்தின் தலைவர் என்று தமிழ் மக்கள் பரம்பரையாக நம்புகிறார்கள். தமிழில் குடமுழுக்கு செய்வதற்கு யார் தடுப்பது? எது தடையாக இருக்கிறது? என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

மதுரை அவனியாபுரத்தில் மலைச்சாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-

தமிழகத்தில் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மதசார்பற்ற சமூக நிதி வெற்றி கூட்டணி சார்பில் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி களப்பணி ஆற்ற உள்ளது.

இப்போது இடது சாரிகள் எடுத்திருக்கும் முடிவு அவர்களுடைய அரசியல் உரிமை அரசியல் சுதந்திரம். தனித்து அவர்கள் போட்டியிடுகிறார்கள் என்றாலும் கூட தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தொடர்வதற்கு அவர்களின் ஆதரவு நீடிக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஆகவே இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால் அது தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரான நிலைப்பாடு இல்லை.

கோகுல்தாஸ் கமிஷன் அறிக்கை வெளியாகி இருக்கிறது கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு பின்னணியை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட ஆணையம். பல்வேறு பரிந்துரைகளை முன் வைத்திருக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த ஆணையம் முன் வைத்திருக்கும் பரிந்துரைகளை ஏற்று அவற்றை நடைமுறைப்படுத்த முன் வரவேண்டும். படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

திமுக சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிலர் நாகரிக வரம்புகளை மீறி மிகக் கடுமையாக முதலமைச்சரையும் அவருடைய பொறுப்பையும் மாண்பையும் மீறி ஒருமையில் வசைப்பாடி இருப்பதும்,அமைச்சர் நிர்மல் குமார் குறித்து பேசும்போது மக்களவை உறுப்பினர் ஆ ராசா தாயை பலிக்கும் வகையில் மிக இழிவான சொற்களால் வசைப்பாடி இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.

பவள விழா கொண்டாடிய பாரம்பரியம் உள்ள இயக்கம் திமுக. பெரியார் அண்ணா கலைஞர் போன்ற தலைவர்கள் பக்குவப்படுத்திய இயக்கம் திமுக.
எவ்வளவு வசைபாடினாலும் அவர்களை வாழ்த்துவதே தன்னுடைய அரசியல் என்கிற முறையில் கலைஞர் மிகக் கடுமையாக விமர்சித்தவர்களை கூட இழித்துப் பழித்து பேசியதில்லை.

இது மூன்றாம் தர அரசு என்று கலைஞர் அரசை சட்டமன்றத்தில் ஹண்டே பேசியபோது கூட இதை திருத்திக் கொள்ள வேண்டும் இது நான்காம் தர அரசு, சூத்திரர்களால் நடத்தப்படுகின்ற அரசு என்று பதில் சொன்னார்.
அண்ணாவை அவருடைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் அவருடைய தாயை பழிக்கும் வகையில் பதாகைகளை வைத்த போது அந்த பதாகைகளின் முன்னால் வெளிச்சம் இட்டு வையுங்கள், விளக்கு போடுங்கள் பொதுமக்கள் பார்க்கட்டும் அவர்களின் லட்சணத்தை புரிந்து கொள்ளட்டும் என்று சொன்னார் அண்ணா.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞரால் பக்குவப்படுத்தப்பட்ட இயக்கம் இன்று இவ்வளவு நிச்சயமான வார்த்தைகளால் தாயை பழிக்கும் இழி சொற்களால் அரசியல் எதிரிகளை விமர்சிப்பது கவலை அளிக்கிறது. இது தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக போகும் என்பதை விட திமுகவுக்கு எதிராக மக்களிடத்தில் கருத்து பதிவாகும் என்பதை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அறிவுறுத்துகிறேன். அவர் வெளிப்படையாக இந்த போக்கை கண்டிக்க வேண்டும். பொதுமக்கள் அறியும் வகையில் அவர்களை கண்டிக்க வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு நடைபெற உள்ள சூழலில் அங்கே தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. இதை புறந்தல்லாமல் தமிழ் மக்களால் நிறுவப்பட்டு புதுப்பிக்க பெற்று வழிபாடு செய்யப்பட்டு வருகிற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தமிழ் ஒலிக்க வேண்டும்.

அன்னை மீனாட்சி தமிழ்க்கான அடையாளமாக மக்கள் நம்புகிறார்கள் அதேபோல சிவபெருமானையும் தமிழ் சங்கத்தின் தலைவர் என்று தமிழ் மக்கள் பாரம்பரிய பரம்பரையாக நம்புகிறார்கள். தமிழில் குடமுழுக்கு செய்வதற்கு யார் தடுப்பது? எது தடையாக இருக்கிறது? தமிழில் குடமுழுக்கு நடத்த அரசு ஆணையிட வேண்டும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அதேபோல ஐந்தொழில் சமூகத்தை சார்ந்த, விஸ்வகர்மா குலத்தை சார்ந்தவர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்கிற கோரிக்கை வைத்து வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள். புதுப்பிக்கும் அனைத்து நிலைகளிலும் அவர்களின் பங்களிப்பு மகத்தானது கதவு முதல் தாழ்ப்பாழ் வரை அனைத்திலும் அவர்கள் பங்கு இருக்கும் சூழலில் அவர்களையும் கோவிலுக்கு அனுமதிக்க முடியாது என்பது ஏற்புடையது அல்ல. ஆகவே அவர்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்யும் போது மக்கள் கருத்தை கேட்பது அவசியமானது. மக்களின் உணர்வுகளுக்கு மாறாக வகை மற்றும் செய்யப்பட்டால் அது தவிர்க்கப்பட வேண்டும்.

தலைமை செயலகம் கட்டுவதற்கு 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது அந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் அந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை மதித்து அதற்கு ஏற்ப அரசு முடிவு எடுக்க வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *