Headlines

கட்டண பிரச்சனைக்கு அமைச்சர் தான் காரணம் : ஆம்னி பேருந்து சங்கத்தினர் குற்றச்சாட்டு

கட்டண பிரச்சனைக்கு அமைச்சர் தான் காரணம் : ஆம்னி பேருந்து சங்கத்தினர் குற்றச்சாட்டு

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள் ஆம்னி பேருந்து நிலையத்தில் அனைத்து ஆம்னி பேருந்து மற்றும் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜெயம் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு என்று பிரச்சினை எழுந்து வருவது தொடர்பாக இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை, டிக்கெட் விலை உயர்வு என செய்திகள் வருகிறது. ஆனால் எங்கள் சங்கத்தில் 2024 ல் கொடுத்த Fair Copy அடிப்படையில் தான் 99% பேருந்துகள் ஓடி வருகிறது என்றார். ஒரு சில பேருந்துகள் அதிக விலையில் இயக்கப்படுகிறது என்றும் ஆனால் அது எங்கள் சங்கத்தினரின் பேருந்துகள் அல்ல என்றார்.

நாங்கள் அதிக கட்டணம் வசூலிக்கவில்லை, ஆனால் தவறு செய்யாத வண்டிகளுக்கு இந்த அரசாங்கம் அபராதம் விதிக்கிறது என்றும் விமர்சித்த அவர் இதற்கு காரணம் போக்குவரத்து துறை அமைச்சர் தான் அவர் முறையாக இது பற்றி கேட்டிருக்கலாம் அமைச்சரின் நடவடிக்கைகள் சரி அல்ல. போக்குவரத்து துறை அமைச்சர் எங்களை சந்திக்கவில்லை. நல்லது செய்தாலும் கெட்டப் பெயர் வருவதற்கு காரணம் அமைச்சர்கள் தான் என குற்றம் சாட்டினார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆஃபர் என்கிற பெயரில் குறைந்த விலையில் வண்டிகளை இயக்கி விட்டு ஆஃபர் முடிந்து மீண்டும் அதே கட்டணம் வரும் போது அதிகமாக தெரிகிறது என்றும், அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்தால் அதன் படி வாகனங்களை இயக்க தயார் அதற்கு அரசாங்கம் தங்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இதை பற்றி பேசினால் என்னை துணை நடிகர் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்றார்.

தற்போது பர்மிட் பதிவு ஆன்லைனில் இலவசமாக உள்ளது. ஆனால் அதனை கொடுப்பதில்லை. காலதாமதம் ஆவதால் லஞ்சம் கேட்க நினைக்கிறார்களோ என எண்ண தோன்றுகிறது என்றார்.

அமைச்சர் பொறுப்பற்ற அமைச்சராக தான் தெரிகிறார் என்று. ஆக்டிவாக இல்லை என்று கூறிய அவர், இவ்வளவு பிரச்சனை நடப்பதே அமைச்சரால் தான், பர்மிட் கொடுத்து இருந்தால் புதிய வாகனங்கள் இயக்கப்பட்டிருக்கும்
அமைச்சரின் செயல் படு மெத்தனமாக உள்ளது என்றார்.

50 வருட பிரச்சனை இது. உடனே சரிசெய்ய முடியவில்லை என்றாலும் இதில் கவனம் செலுத்த வேண்டும், இ காமர்சில் யார் ஓனர் என்றே தெரியவில்லை அதனால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *