Headlines
இமானுவேல் சேகரனார் குருபூஜை : பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

இமானுவேல் சேகரனார் குருபூஜை : பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நாளை தியாகி இமானுவேல் சேகரனார் குருபூஜை விழா நடைபெறுகிறது.இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், மற்றும் சிவகங்கை, திருப்புவணம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில், தேவகோட்டை மற்றும் சாக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் செயல்பட்டுவரும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Read More
காரைக்குடி கிராவல் மண் கடத்தல் – டாரஸ் லாரி, JCB, ஹிட்டாச்சி பறிமுதல்; ஓட்டுநர் கைது

காரைக்குடி கிராவல் மண் கடத்தல் – டாரஸ் லாரி, JCB, ஹிட்டாச்சி பறிமுதல்; ஓட்டுநர் கைது

காரைக்குடி அருகே வடகுடி கண்மாயில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிக் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், டாரஸ் லாரி, JCB, ஹிட்டாச்சி இயந்திரம் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், லாரி ஓட்டுநரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வடகுடி கண்மாய் பகுதியில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்…

Read More
தாராபுரம் இடைத்தேர்தல் : முன்னாள் எம்.எல்.ஏ சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு - தவெகவினர் கொண்டாட்டம்

தாராபுரம் இடைத்தேர்தல் : முன்னாள் எம்.எல்.ஏ சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு – தவெகவினர் கொண்டாட்டம்

தாராபுரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளாராக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சத்யபாமா அறிவிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.நேற்று வேட்புபனு தாக்கல் துவங்கியது. திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுவார் என திமுக தலைமை நேற்று…

Read More
யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது : மு.க.ஸ்டாலின் பதிலடி

யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது : மு.க.ஸ்டாலின் பதிலடி

வீட்டில் என்னை சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார். இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியதாவது, விஜய் கையை வைத்து தாடையை காட்டியது சரிதான். மிசா கைதிகளை காவலர்கள் தாக்கியபோது எனது தாடை உடைந்தது, அந்த தழும்பு இப்போதும் உள்ளது. மிசா சிறையில்…

Read More
கிணற்றில் தவறி விழுந்த மான் குட்டி : உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை

கிணற்றில் தவறி விழுந்த மான் குட்டி : உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊருக்கு வெளியே வயல் பகுதியில் நாய் ஒன்று மான் குட்டியை துரத்திச் சென்றது. உயிர் பிழைப்பதற்காக ஓடிய மான் குட்டி, அப்பகுதியில் ஹரிராம் என்பவருக்குச் சொந்தமான 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது மாலையில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றுக்கு வந்த ஹரிராம், கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்பதை அறிந்து எட்டிப் பார்த்தபோது, மான் குட்டி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஆலங்குளம் வனத்துறையினருக்கு தகவல்…

Read More
உருவ கேலியை கண்டித்த நேபாள இளைஞர் கொலை : ஒருவர் கைது, முக்கிய குற்றவாளிக்கு வலை.

உருவ கேலியை கண்டித்த நேபாள இளைஞர் கொலை : ஒருவர் கைது, முக்கிய குற்றவாளிக்கு வலை.

​கோவை அருகே பாப்பம்பட்டி பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் கொடூரமான முறையில் செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரைச் சூலூர் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர் கோவை, பாப்பம்பட்டி நந்தினி நகர் பகுதியில் உள்ள தனியார் நிலத்தின் வெற்றுச் செங்கல் கொட்டகை ஒன்றில், வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாகச் சூலூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது….

Read More
கல்வராயன் மலையில் கள்ளச்சாராய உற்பத்தி பெரிய அளவில் குறைந்துள்ளது : எஸ்பி ஷஹ்னாஸ்

கல்வராயன் மலையில் கள்ளச்சாராய உற்பத்தி பெரிய அளவில் குறைந்துள்ளது : எஸ்பி ஷஹ்னாஸ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பாக ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் கலந்துகொண்டு பேசினார் அவர் பேசுகையில்,கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையின் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் 3 சிறப்பு குழுக்கள் அமைத்து செயல்பட்டதன் விளைவாக கள்ளச்சாராயம் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு திருந்தி…

Read More
விழுந்து, எழுந்து சிலம்பம் சுழற்றிய பெண் எம்பி

விழுந்து, எழுந்து சிலம்பம் சுழற்றிய பெண் எம்பி

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், சிலம்பம் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்த போது, எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்த மயிலாடுதுறை நாடாளுமன்ற எம்பி சுதா, மீண்டும் எழுந்து போட்டியில் விளையாடியது கவனத்தை ஈர்த்தது மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில், மயிலாடுதுறை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக் காண விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கின. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா விளையாட்டுப்…

Read More
மக்களை நம்பி களத்தில் இறங்குகிறேன் :திமுக வேட்பாளர் சுகன்யா

மக்களை நம்பி களத்தில் இறங்குகிறேன் :திமுக வேட்பாளர் சுகன்யா

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தளவாய் பட்டினம் பகுதியை சேர்ந்தவர். இவரது கணவர் மணிவாசகம் விவசாயி. மேலும் திமுக திருப்பூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி பொறுப்பில் உள்ளார் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுகன்யா வழக்கறிஞராக உள்ளார். திருப்பூர் கோவை நீதிமன்றத்தில் 11 ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறார். இவர்களது குடும்பம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் உள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் திமுகவில்…

Read More
17 நாய்கள் மர்ம மரணம் : விசாரணை நடத்த விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

17 நாய்கள் மர்ம மரணம் : விசாரணை நடத்த விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டலத்திற்கு உட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் 17 தெருநாய்கள் வாயில் ரத்தம் வடிந்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் இந்திரா நகர், பத்மாவதி நகர், யஷ்வந்த் நகர், எல். எஸ் நகர், எல் எஸ் கே நகர், போன்ற சுற்று வட்டார பகுதிகளில் 17க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வாயில் ரத்தம் வடிந்தபடி மர்மமான முறையில் இறந்து…

Read More