Headlines

கல்வராயன் மலையில் கள்ளச்சாராய உற்பத்தி பெரிய அளவில் குறைந்துள்ளது : எஸ்பி ஷஹ்னாஸ்

கல்வராயன் மலையில் கள்ளச்சாராய உற்பத்தி பெரிய அளவில் குறைந்துள்ளது : எஸ்பி ஷஹ்னாஸ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பாக ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்க கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் கலந்துகொண்டு பேசினார் அவர் பேசுகையில்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையின் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் 3 சிறப்பு குழுக்கள் அமைத்து செயல்பட்டதன் விளைவாக கள்ளச்சாராயம் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு திருந்தி வாழ்பவர்களுக்கு மறுவாழ்வு உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் தெரிவித்தார் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் கடந்த திமுக அரசால் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் 484 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை, கடந்த செப்டம்பர் 8ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது கள்​ளக்​குறிச்சி கள்​ளச்​சா​ராய உயி​ரிழப்​பு​களுக்கு அதி​காரி​களின் அலட்​சி​யமே காரணம் என்று சட்​டப்​பேர​வை​யில் சமர்ப்​பிக்​கப்​பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்​தாஸ் ஆணைய அறிக்​கை​யில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *