Headlines

அரசு ஊழியர்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தினமும் தங்களது கைவசம் கொண்டு வரும் சொந்த ரொக்கப் “Personal Cash Register” என்ற பிரத்யேகப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த ரொக்கப் பதிவேடானது, தினமும் வருகைப் பதிவேட்டுடன் (Attendance Register) சேர்த்து அலுவலகத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

அலுவலகத் தலைவரின் மேலதிகாரிகள் மாதம் இருமுறை (Bi-monthly) இந்த ரொக்கப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

இந்தப் பதிவேட்டைச் சரியாகப் பராமரிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவர், கண்காணிப்பாளர் மற்றும் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்கும் பணியாளர் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *