Headlines

FQL முதலீட்டு மோசடி: நத்தம் அருகே இளைஞர் தற்கொலை, பொதுமக்கள் சாலைமறியல்

FQL முதலீட்டு மோசடி: நத்தம் அருகே இளைஞர் தற்கொலை, பொதுமக்கள் சாலைமறியல்

FQL முதலீட்டு மோசடி: நத்தம் அருகே இளைஞர் தற்கொலை, பொதுமக்கள் சாலைமறியல்

நத்தம் அருகே
FQL செயலி மூலம் முதலீடு செய்து பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் சடலத்தோடு திண்டுக்கல் – மதுரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், கீழவளவு, மேலவளவு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், FQL Exchange மற்றும் VG Investment போலி செயலிகள் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு இரண்டே மாதங்களில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது. பணத்தை இரட்டிப்பாக்குவதாக சுமார் ரூ. 1000 கோடிக்கு மோசடி நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FQL செயலி மூலம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறப்பட்டதை நம்பி பலர் பணம் முதலீடு செய்ததாகவும், பின்னர் செயலி செயல்படாமல் போனதால் முதலீட்டாளர்கள் பணத்தை இழந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காசம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராசு (எ) மாயழகன் FQL முதலீட்டில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ஆத்தி்மடைந்த கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர திண்டுக்கல் – மதுரை சாலையில் அவரது சடலத்தோடு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *