Headlines

சூரியனை சுற்றி திடீர் ஓளிவட்டம் : கண்டு ரசித்த பொதுமக்கள்

சூரியனை சுற்றி திடீர் ஓளிவட்டம் : கண்டு ரசித்த பொதுமக்கள்

வானில் சூரியனை சுற்றி திடீரென வானவில் வண்ணத்தில் வட்டம் தோன்றியதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

வேலூரில் வானில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் சூரியனை சுற்றி திடீரென வானவில் நிறங்களுடன் கூடிய வட்டம் தோன்றியது.

இதனை பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.

சுமார் 1 மணி நேரம் வானில் தெரிந்த காட்சியை பலரும் செல்போனில் வீடியோ எடுத்து பகிரந்தனர்.

சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன.

அரிதாக தெரியும் இந்த நிகழ்வை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *