Headlines

குடிநீர் பிரச்சனை : அரசு பேருந்தை சிறை பிடித்த பெண்கள்

குடிநீர் பிரச்சனை : அரசு பேருந்தை சிறை பிடித்த பெண்கள்

குடிநீர் பிரச்சினைக்காக காலி குடங்களுடன் வந்த பெண்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் மல்லகுண்டா பகுதியில் சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் குருபாணிகுண்டா திருப்பத்தூர் வரை செல்லும் அரசு பேருந்து சிறை பிடித்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசு பேருந்தை அனுப்பி வைத்தனர் குடிநீர் பற்றாக்குறையால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *