பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத்திட்டத்தின்
இரண்டு மற்றும் மூன்றாம் மண்டலப் பாசனக் கால்வாய்களைத் தூர்வாரி உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
மேலும் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பதற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதிற்கு பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட மாவட்ட ஆட்சியரை
சந்தித்து முறையிட்டும் மாவட்ட ஆட்சியர் எந்தவிதமான உத்திரவாதத்தையும் வழங்கவில்லை.
இதையடுத்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பிஏபி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
