Headlines

பிஎட், எம்எட் தேர்வு முடிவுகள் வெளியீடு

பிஎட், எம்எட் தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பிஎட் மற்றும் எம்எட் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்கள் லாக்-இன்-ஐ பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் தனியே கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்படாது. தேர்வு முடிவில் ஏதேனும் விளக்கம் கோர வேண்டுமானால் செப்டம்பர் 7-ம் தேதிக்குள் (திங்கள்) ஆன்லைனில் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) எம்.கண்மணி, கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களை அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *