Headlines

விண்வெளியில் அடுத்த உலகப்போர் : எச்சரிக்கும் சீன ஆய்வு

விண்வெளியில் அடுத்த உலகப்போர் : எச்சரிக்கும் சீன ஆய்வு

பூமிக்கும், நிலவுக்கும் இடைப்பட்ட விண்வெளி பகுதி வல்லரசு நாடுகளின் எதிர்கால போர்க்களமாக மாறும் என சீன ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நிலவின் சிக்கலான ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலன்கள் மறைந்து தாக்குதல் நடத்தவும், முக்கிய விண்வெளிப் பாதைகளைக் கைப்பற்றி எதிரி நாட்டு விண்கலன்களை வழிமறிக்கவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டலத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விண்வெளியின் முழு அதிகாரத்தையும் தன்வசப்படுத்தி எதிரிகளை அச்சுறுத்த முடியும் என ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாங் ஜாஹுய் விளக்கம் அளித்துள்ளார்.

JOURNAL OF COMMAND AND CONTROL இதழில் இந்த ஆய்வு வெளியீடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *