திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரேக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் நாட்றம்பள்ளி போலீசார் கூத்தாண்டகுப்பம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருப்பதி (44) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையில் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஹான்ஸை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தியதாக சொல்லப்படும் மொபட்டையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் திருப்பதி மீது வழக்கு பதிந்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
