தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் இல்லம் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், அவருடைய வழக்கறிஞர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என ஆதரவாளர்கள் கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவருடைய இல்லத்தில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை பார்த்து கை அசைத்து விட்டு, இன்னும் 10 நிமிடங்கள் காத்திருங்கள் என்று கூறிவிட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டார்.
