கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சுற்று வட்டாரபகுதிகளில் தேயிலை தோட்டங்களில் அவ்வபோது காட்டுயானைகள் புகுந்து தொழிலாளர்களை அச்சுறுத்துவதும் தொழிலாளர்களை தாக்குவதும் தொடர்கதையாகிவருகிறது.
இந்தநிலையில் மூணாறு கன்னிமலை தேயிலை தோட்டத்தின் அடிவாரபகுதியில் பாண்டிராஜ் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென தோட்டத்திற்குள் புகுந்த இரண்டு காட்டுயானைகள் பாண்டிராஜை தாக்கமுயன்றது .
இதையடுத்து யானைகளிடமிருந்து தப்பிக்க பாண்டிராஜ் தலைதெறிக்க ஓடி பாதுகாப்பான இடத்திற்கு வந்ததால் நூலிழையில் உயிர்தப்பினார்.
தொடர்ந்து காட்டுயானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிகளுக்கு செல்லமுடியாமல் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மேலும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளிலும் யானைகள் சுற்றிவருவதால் காட்டுயானைகளை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
