Headlines

நீ கோட்ட அழிணே , நான் மறுபடியும் சாப்புடறேன் : காரைக்குடியில் புரோட்டா போட்டி

நீ கோட்ட அழிணே , நான் மறுபடியும் சாப்புடறேன் : காரைக்குடியில் புரோட்டா போட்டி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 25 புரோட்டாக்களை சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சிறுவன் உட்பட 6 பேர் போட்டியில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர்.

இதையடுத்து, காரைக்குடியில்நடைபெற்ற போட்டியில், ஒரு சிறுவன் மற்றும் 5 இளைஞர்கள் என மொத்தம் 6 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்றவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு புரோட்டாக்களை சாப்பிட்டனர். இதில் சில போட்டியாளர்கள் 3, 5, 9, 10 மற்றும் 11 புரோட்டாக்கள் வரை சாப்பிட்ட நிலையில், அதற்கு மேல் சாப்பிட முடியாமல் போட்டியில் இருந்து விலகினர்.

தொடர்ந்து, அதிகபட்சமாக 16 புரோட்டாக்களை சாப்பிட்ட சேகர் என்பவர் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

வெற்றி பெற்ற சேகருக்கு ரூ.6,001 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *