Headlines

வறட்சி எதிரொலி : செயற்கை குட்டையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

வறட்சி எதிரொலி : செயற்கை குட்டையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து வெள்ளக்கிணர் பகுதியில் வறட்சி காரணமாக குட்டையில் நீர் இல்லாததால் செயற்கையாக அமைக்கப்பட்ட 20 அடி ஆழ குட்டையில் மாநகராட்சி சார்பில் நீர் நிரப்பி அதில் கரைத்தனர்.

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் இந்து முன்னணி, பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிசத், அகில பாரத இந்து மஹா சபா, iந்து மக்கள் கட்சி, பாரத் சேன, சிவ சேனா, அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர்.

மூன்றாம் நாளான இன்று அவ்வாறு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து வெள்ளக்கிணர் பகுதியில் வறட்சி காரணமாக குட்டையில் நீர் இல்லாததால் செயற்கையாக அமைக்கப்பட்ட 20 அடி ஆழ குட்டையில் மாநகராட்சி சார்பில் நீர் நிரப்பி அதில் கரைத்தனர்.

குட்டையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஊழியர்கள் தண்ணீர் இறங்கி விநாயகர் சிலைகலை பெற்று நீரில் மூழ்க வைத்து கரைத்தனர். விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைக்கும் நிகழ்ச்சியை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *