தவெக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் 30 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.
ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் அனைத்தும் தவெக கட்சி கொடியான மஞ்சள், சிகப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முந்தைய அரசுகளில் ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப பேருந்துகளின் வண்ணங்கள் மாற்றப்படுவது வழக்கம். ஆனால் திமுக, அதிமுக கட்சி கொடிகளை பிரதிபலிப்பதாக அவை இருக்காது.
தற்போது அமைந்துள்ள புதிய ஆட்சியும் தங்களுக்கு விருப்பமான வண்ணங்களை பேருந்திற்கு வழங்கி உள்ளது.
அதில் கட்சியின் வண்ணம் அப்பட்டமாக இடம் பெற்றுள்ளது பேசு பொருளாக மாறி உள்ளது.
