வால்பாறை நகரப் பகுதியிலும் மற்றும் சாலையிலும் சிறுத்தை புலிகள் இரவு நேரங்களில் உலா வருவது வழக்கமாக உள்ளது இன்லையில் வால்பாறைந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் வாட்டர் பால் தடுப்பு சுவரில் அமர்ந்த சிறுத்தையை கண்டு அவ்வழியாக சென்ற வாகனத்தில் சென்றவர்கள் கண்டு செல்போனில் படமெடுத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது வால்பாறை நகர பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்பு அருகாமையில் சிறுத்தை புலி நடமாட்டம் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இரவு நேரம் வால்பாறை பொள்ளாச்சி சாலை வாட்டர் பால் எஸ்டேட்டில் சாலை ஓரம் தடுப்பு சுவரில் அமர்ந்து ஓய்வெடுத்த சிறுத்தை புலியை கண்டு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்தனர்.
மேலும் வால்பாறை டவுன் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் குடியிருப்புக்கு சிறுத்தை புலி அருகாமையில் நடந்து சென்றது
குடியிருப்பில் உள்ள CCTV கேமராவில் பதிவானது.
வனத்துறையினர் வனவிலங்குகளை கண்டு அதை துன்புறுத்தும் வகையில் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
