உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாயார் கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் அடிக்கடி புலிகள் நடமாட்டம் தென்ப்பட்டு வருகிறது. புலியை காண அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புலிகள் நடமாடுவது அரிதாக தென்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சுற்றுலா பயணிகள் வாகனத்தில் சென்றபோது புலி சாலையை கடக்க வந்துள்ளது. முதலில் தாய் புலி சாலையைக் கடந்து சென்ற பின்பு இரண்டு குட்டிகளும் வேகமாக தாய் புலியின் பின்னால் ஓடி சென்ற காட்சிகளை சுற்றுலா பயணிகள் பிரம்மிப்புடன் பார்த்து ரசித்தனர் .
