Headlines

திருப்பதி : சர்வ பூபால வாகனத்தில் சுவாமி திருவுலா

திருப்பதி : சர்வ பூபால வாகனத்தில் சுவாமி திருவுலா

உலகத்தில் உள்ள மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் தானே என்பதை உணர்த்தும் விதமாக பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான நேற்று இரவு ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சர்வ பூபால வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்வதால் வாழ்கையில் அகங்காரத்தை ஒழித்து நிரந்தரமான பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சுவாமி வீதிஉலாவின் போது நான்கு மாடவீதியில் திரண்டு இருந்த பல்லாயிரகனக்காண பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி மனம் உருகி சுவாமியை வேண்டி கொண்டனர்.

இதில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள், பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *