வங்கி ஊழியர்களுக்கு 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் திருப்பூர் பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளை முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய வங்கிகள் சங்கத்துடன் இடம்பெற்ற 12 வது இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் 9 வது கூட்டு குறிப்பில் வாரம் 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரி சங்கத்துடன் இணைந்து ஒப்புதல் பெறப்பட்டது, ஆனால் இந்த ஒப்புதல் இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை,
இதையடுத்து 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வங்கி ஊழியர்கள் 200க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
