Headlines

அமராவதி பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

அமராவதி பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

அமராவதி பிரதான கால்வாய் வழியாக 15 நாட்கள் தண்ணீர் திறந்து குடிநீர், விவசாய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என விவசாயிகள் தாராபுரம் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

அமராவதி பிரதான கால்வாயை பயன்படுத்தி பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் உடுமலை மடத்துக்குளம் தாராபுரம் ஒன்றிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதாகவும் குடிநீர் இல்லாமலும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் என்னை கரும்பு போன்ற நீண்ட கால பயிர்களுக்கு லாரி மூலம் தண்ணீர் பெற்று ஊற்ற வேண்டிய நிலை உள்ளதாகவும் ஆண்டுதோறும் வழக்கமாக வழங்க வேண்டிய நிறை வழங்குவதால் பிரதான கால்வாய் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் குடிநீர் ஆதாரங்களும் வற்றி போய் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு உடுமலை மடத்துக்குளம் தாராபுரம் பகுதிகளில் தண்ணீர் பிரச்சனையை போக்கும் விதமாக 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 15 தினங்களுக்கு அமராவதி பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து கோவிந்தாபுரம் 2 அமராவதி பிரதான கால்வாய் நீர்நிலை பயன்படுத்தும் சார்பில் தாராபுரம் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா விடம் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *