Headlines

திருமண மோசடிகளை தடுக்க புதிய முறை : ஒப்புதல் அளித்த தமிழக அரசு

திருமண மோசடிகளை தடுக்க புதிய முறை : ஒப்புதல் அளித்த தமிழக அரசு

மேட்ரிமோனியல் தளங்களில் பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக, தன்னார்வ அடிப்படையில் ஆதார் அங்கீகாரம் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ள விரும்பாத பயனர்கள் மாற்று அடையாள ஆவணங்களாக ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், நிரந்தரக் கணக்கு எண் (PAN) அட்டை ஆகியவற்றை குறிப்பிடலாம்.

பயனர்களின் சுயவிவரங்களில் சரிபார்க்கப்பட்ட அடையாளக் குறியீட்டை ஏற்படுத்துதல், ஆள்மாறாட்டத்தைத் தடுப்பது மற்றும் திருமணம் தொடர்பான மோசடிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஆதார் அங்கீகாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அங்கீகாரம் தன்னார்வ அடிப்படையிலானது என்பதால், அதனை மேற்கொள்ளாத காரணத்திற்காக எந்தவொரு சேவையையும் பயனர்களுக்கு மறுக்கக் கூடாது என தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *