Headlines

சிவகங்கை இரட்டைக் கொலை: மேலும் 5 பேர் கைது

சிவகங்கை இரட்டைக் கொலை: மேலும் 5 பேர் கைது

சிவகங்கை அருகே பழமலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய இரு இளைஞர்கள் ஒரு கும்பலால் ஒட ஒட வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் தீபக் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்கள் அப்பகுதியில் இருந்த செல்போன் பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டும்
விசாரணை நடைபெற்றது.

கொலை வழக்கில் தொடர்புடைய பில்லூரைச் சேர்ந்த பாலமுருகன் (24), தணராஜ் (19), சந்தோஷ் (19), மதுரையைச் சேர்ந்த சத்தீஸ்வரன் (25) மற்றும் கார்த்திவேல் (23) ஆகிய 5 பேரை தனிப்படை காவல்துறையினர் கடந்த 17ம் தேதி கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், கொலைக்கான காரணத்தை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 2-வது நாளாக உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பதட்டமான சூழல் நிலவி வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய இந்திரா நகரை சேர்ந்த ஆகாஷ் 21., அலுபிள்ளைதாங்கியை சேர்ந்த மணிகண்டன் 20., சின்னகண்ணூரைச் சேர்ந்த ராஜகோபால் 23., சிவகங்கை மேலரத வீதியை சேர்ந்த சபரிவேலன் 21., கருப்பாயூரணியை சேர்ந்த சுபாஷ் 21., ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *