Headlines

ஆக்ரோஷ ஒற்றை யானை : நூழிலையில் உயிர் தப்பிய தம்பதி

ஆக்ரோஷ ஒற்றை யானை : நூழிலையில் உயிர் தப்பிய தம்பதி

கூடலூரில் சாலையில் உலா வந்த யானையை கண்ட தம்பதியினர் இரு சக்கர வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு தப்பித்து ஓடினர்.ஆக்ரோஷமாக வந்த யானை இருசக்கர வாகனத்தை காலால் உதைத்து சேதப்படுத்தியது .

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் செல்லக்கூடிய வயநாடு மற்றும் வழிகடவு சாலைகள் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் சாலைகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வழிக்கடவு செல்லக்கூடிய சாலையில் யானை நின்றிருந்ததை கண்டு வாகன ஓட்டிகள் இருபுறமும் வாகனங்களை நிறுத்திக் கொண்டனர் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் யானையை கண்டதும் வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு யானையிடமிருந்து தப்பித்தனர். அப்போது ஆக்ரோசமாக இரு சக்கர வாகனத்தின் அருகே சென்ற யானை கால்களால் மிதித்து இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தியது.

பின்பு மற்ற வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பி யானையை விரட்டினர் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *