Headlines

ஓய்வெடுத்த பட்டிமன்ற குரல் :சாலமன் பாப்பையா காலமானார்

ஓய்வெடுத்த பட்டிமன்ற குரல் :சாலமன் பாப்பையா காலமானார்

பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா
வயது மூப்பு காரணமாக மதுரையில் காலமானார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக சாலமன் பாப்பையா பணிபுரிந்தவர்.
எளிய தமிழில் நகைச்சுவை ததும்ப
பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடுவராக நடத்தி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சாலமன் பாப்பையா.

ஒலிநாடாக்கள் காலத்தில் துவங்கிய இவரது பட்டிமன்ற குரல் பட்டி தொட்டிகளில் ஒலித்து பாமர மக்களின் இதயத்தை கவர்ந்தது.
தனியார் தொலைக்காட்சிகள் பெருக்கத்திற்கு பின், பண்டிகை நாட்களில் ஒளிபரப்பபடும் இவரது பட்டிமன்ற நிகழ்ச்சி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை.

2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்ற சாலமன் பாப்பையா,
பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சாலமன் பாப்பையா உரை எழுதியிருக்கிறார்.
2000ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் சாலமன் பாப்பையா பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *