ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையத்தில் 600 ரூபாய் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்சனையில் பெட்ரோல் நிரப்பிய மதுபான பாட்டிலை வீட்டின் ஜன்னல் வழியாக வீசியதில் ஒருவர் காயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே
வேப்பம்பாளையத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவரது வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில், ஜோதி (40) என்பவரின் முகம் மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜேக் @ நவீன் (21) மற்றும் ஜீவானந்தம் (21) ஆகிய இருவருடன், 17 வயது சிறார் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜேக் @ நவீன் ஈரோடு பழையபாளையம் சங்கு நகரைச் சேர்ந்த இவர் இன்டீரியர் ஒர்க் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
ஜீவானந்தம் ஈரோடு NGGO காலனி உழவன் நகரைச் சேர்ந்த இவர் கார் ஒர்க்ஷாப்பில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
இருவரையும் பெருந்துறை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி, பெருந்துறை கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
17 வயது சிறார் ஈரோடு நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
