கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்திச் செல்ல முயன்றதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், நாராயணபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ், 26,
மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம், 26, என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் பன்னீர்செல்வம் கடலூர் முதல் பண்ருட்டி செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக, கடலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி வருகிறார்
இருவரும் இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை வேலூருக்கு கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
திருவதிகை பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது
அவர்களிடம் இருந்து
1 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
