Headlines

புதுவையில் போக்குவரத்து நெரிசல் : திமுக எம்.எல்.ஏ செய்த கவனயீர்ப்பு

புதுவையில் போக்குவரத்து நெரிசல் : திமுக எம்.எல்.ஏ செய்த கவனயீர்ப்பு

புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிலை அரசின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் நோக்கில் ராஜ்பவன் தொகுதி திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் தனது வீட்டில் இருந்து புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு இன்று நடந்தே வந்தார்.

இதுகுறித்து திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் கூறுகையில், புதுச்சேரி நகரப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்ய வலியுறுத்தியும், விடுமுறை நாள்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போலீஸார் கட்டுப்படுத்த தவறுகின்றனர்.

மேலும் போக்குவரத்து போலீஸார் பணியில் இருப்பதில்லை. அதை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி தனது வீட்டில் இருந்து நடந்தே சட்டப்பேரவைக்கு வருகை தந்ததாக தெரிவித்தார். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *