Headlines

இளைஞர் வயிற்றுக்குள் இருந்த நாணயங்கள், தாயத்து, நகவெட்டி, ஹேர்பின், நட்டு : வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்

இளைஞர் வயிற்றுக்குள் இருந்த நாணயங்கள், தாயத்து, நகவெட்டி, ஹேர்பின், நட்டு : வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்

திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரித்திக் ரோஷன் (16) மனவளர்ச்சி குன்றிய இளைஞர். அவரது தாயார் இளைஞருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி வருவதாக கூறி திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.

தனியார் மருத்துவமனை பொது அறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் சுந்தரபாண்டியன் உடனடியாக ரித்திக் ரோஷனை இரைபையை பரிசோதனை செய்து பார்த்தார். பின்னர் ஸ்கேன் செய்து பார்த்த பொழுது இரைப்பையில் சந்தேகத்திற்குரிய கூர்மையான பொருட்கள் இருப்பதை கண்டறியப்பட்டு உடனடியாக அவரது தாயாரிடம் விசாரித்த பொழுது அடிக்கடி நகவெட்டி செயின் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போகும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மயக்க மருந்து நிபுணரை வரவழைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதில் சிறுவனின் இரைப்பையில் இருந்து 23 ஐந்து ரூபாய் நாணயங்கள், தாயத்து, நகவெட்டி, ஹேர்பின், நட்டு போன்ற பொருட்களை அறுவை சிகிச்சை செய்து பாதுகாப்பான முறையில் அகற்றினர்.

இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிறுவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *