Headlines

மாணவியிடம் ஆபாச செய்கை : வடமாநில வாலிபருக்கு தர்ம அடி

மாணவியிடம் ஆபாச செய்கை : வடமாநில வாலிபருக்கு தர்ம அடி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரசுப் பள்ளி மாணவிகளிடம் ஆபாச செய்கை காண்பித்த வடமாநில இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

கும்மிடிப்பூண்டி அருகே கரும்புகுப்பம் பகுதியில் பள்ளி முடிந்து அரசுப்பள்ளி மாணவிகள் நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் பள்ளி மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசி, ஆபாச செய்கை காண்பித்துள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்து வடமாநில இளைஞரை சுற்றி வளைத்து சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர். பெண்கள் துடைப்பத்தை எடுத்து வந்தும், ஆண்கள் கம்பு எடுத்து வந்தும் சரமாரியாக அடித்து துவைத்தனர்.

தொடர்ந்து வடமாநில இளைஞரை காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து மீட்டு சிப்காட் காவல் நிலையம் அழைத்து சென்றனர். வடமாநில இளைஞர் மதுபோதையில் உள்ள நிலையில் காவல்துறையினர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

பள்ளி மாணவிகளிடம் ஆபாச செய்கை காண்பித்த வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *