சைபர் பாதுகாப்பு சோதனையின் போது, 3 நிறுவனங்களின் சிஸ்டத்தை ஜெமினி ஏஐ ஹேக் செய்ததாக கூகுள் நிறுவனம் பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒரு கற்பனை நிறுவனத்தின் தகவல்களைப் பெற ஜெமினி ஏஐக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தவறுதலாக 3 நிஜ நிறுவனங்களின் பாஸ்வேர்டுகளைக் கணித்து, அவைகளின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து ஊடுருவியுள்ளது.
இருப்பினும், தான் ஊடுருவியது நிஜ நிறுவனங்களின் சிஸ்டம் என்பதை உணர்ந்த உடனேயே ஜெமினி எஐ தானாகவே ஊடுருவலை நிறுத்திவிட்டு வெளியேறியதாகவும், இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
