கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக
மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு அண்டை மாநிலங்கள் போல் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மாற்றுத்திறனாளி நல சங்கத்தின் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில், மாவட்ட செயலாளர் திருப்பதி மாவட்ட பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.6000/-த்தை உடனே உயர்த்தி வழங்க வேண்டும்,
உதவித்தொகை கேட்டு மனு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகையை வழங்கிட வேண்டும்.
ஆந்திரா , பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளர்களுக்கு மாந்திர உதவி தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் தோறும் ரூ6000 உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
