Headlines

மரத்தில் மோதிய சொகுசு கார் : 2 இளைஞர்கள் உயிரிழப்பு

மரத்தில் மோதிய சொகுசு கார் : 2 இளைஞர்கள் உயிரிழப்பு

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி யில் சொகுசு கார் புளிய மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்ரனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் நோக்கி வந்த வாகனம் கொல்லங்குடி அருகே புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த வாகனத்தில் ஐந்து இளைஞர்கள் பயணம் செய்த நிலையில் சிவகங்கையை சேர்ந்த கார்த்திகேயன் (38) ஷேக் முஹம்மது(39) இந்த இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர்.

மேலும் வெங்கட சுப்பிரமணியன், தேவா, விக்னேஷ் மூவர் படுகாயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஐந்து இளைஞர்கள் பயணம் செய்த வாகன விபத்துக்குள்ளாகி இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *