Headlines

பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகள் : வேதனையில் வேர்க்கடலை விவசாயிகள்

பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகள் : வேதனையில் வேர்க்கடலை விவசாயிகள்

பேரணாம்பட்டு அருகே மலை கிராமத்தில் குரங்குகள் வேர்க்கடலை பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து குரங்குகள் வேர்க்கடலை பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் குரங்குகள் தொல்லையால் மலை கிராமத்தில் பல விவசாயிகள் வேர்கடலை பயிரிடுவதை நிறுத்தி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் குரங்குகளையும் வன விலங்குகளையும் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க பேரணாம்பட்டு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க மலை கிராம விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *