Headlines

திண்டுக்கல்லில் இடி மின்னலுடன் பலத்த மழை

திண்டுக்கல்லில் இடி மின்னலுடன் பலத்த மழை

தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்து இரண்டு மாதத்திற்கு மேலாகியும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான வெயில் அடித்து வருகிறது.

இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக்கி வந்தனர்.
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

ஆனால் திண்டுக்கல்லில் வழக்கம்போல் காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது.
இந்நிலையில் மாலை வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது.பின்னர் இடி, மின்னல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

திடீர் மழையின் காரணமாக சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.இதன் காரணமாக திண்டுக்கல்லில் குளிர்ந்த காற்றுடன் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

இதேபோல் திண்டுக்கல் நகரை சுற்றி உள்ள நாகல் நகர் பாலகிருஷ்ணாபுரம், ஆர் எம் காலனி, என் ஜி ஓ காலனி, சிலப்பாடி, செட்டி நாயக்கன்பட்டி, பேகம்பூர், பூச்சி நாயக்கன் பட்டி, தோமையார்புரம், ஆகிய பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *