வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொத்தகுப்பம் பாலாற்றில் மணல் எடுத்து மினி லாரியில் ஏற்றிக்கொண்டு அதன் மீது எம் சாண்ட் நிரப்பி இரவு நேரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக குடியாத்தம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கொத்தகுப்பம் கிராமத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட குடியாத்தம் காவல்துறையினர் அவவழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் ஆற்று மணலை நிரப்பி அதன் மீது எம் சாண்ட் தூவி மணல் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஓட்டுநர் லோகநாதனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மலபார் ராஜேஷ் என்பவரை குடியாத்தம் போலீசார் தேடி வருகின்றனர். இவர் மணல் கொள்ளையில் பல முறை கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தவர் ஆவார்.
மினி லாரியில் ஆற்று மணலை நிரப்பி அதன் மீது எம் சாண்டை தூவி காவல் துறையினரை ஏமாற்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
