Headlines

சிஐடியு டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிஐடியு டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில்
மதுபானபெட்டிகளை குடோனில் இருந்து லோடுவண்டிமூலம் டாஸ்மாக்கடைகளில் இறக்குவதற்கு
ரூபாய் 15 ஐ வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் உள்ள டாஸ்மாக் மாநில வாணிபக்கழகம்
அலுவலகம் முன்பு சிஐடியு டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிதர வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுபானபெட்டிகளை குடோனில் இருந்து லோடுவண்டிமூலம் டாஸ்மாக்கடைகளில் இறக்குவதற்கு
ரூபாய் 15 ஐ வழங்கிடவேண்டும் ,
ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000 வழங்கிடவேண்டும் , டெலிவரி சுமை பணி தொழிலாளர்களுக்கு ESI , PF திட்டங்களை அமல்படுத்திட வேண்டும் , வண்டியில் உடையும் பாட்டில்களுக்கு சுமைபணி தொழிலாளர்களிடம் வற்புறுத்தி பணம்பெறுவதை தடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மண்டல பொறுப்பாளர் பாலாஜி தலைமையில் சிஐடியு மாவட்ட தலைவர் ஜோதிபாஸ் , சுமைபணி
மாவட்டத்தலைவர் வீரபாண்டியன் , மாவட்டசெயலாளர் கஜேந்திரன் உட்பட டாஸ்மாக் சுமைபணி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *