Headlines

கொதிக்கும் எண்ணெயை ஊற்றி நாயை கொன்ற கொடூரம் – நாயின் சடலத்தை திருடியது சிசிடிவியால் அம்பலம்

கொதிக்கும் எண்ணெயை ஊற்றி நாயை கொன்ற கொடூரம் - நாயின் சடலத்தை திருடியது சிசிடிவியால் அம்பலம்

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம் எஸ் நகர் சந்திரா காலனி பகுதியில் தெரு நாய் ஓன்று கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொல்லப்பட்ட நிலையில் சாலையில் சடலமாக கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த விலங்கு நல ஆர்வலர் சரிதா, சசிகலா உள்ளிட்ட குழுவினர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் இதேபோன்று ஐந்து நாய்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாக பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தெருவில் வாழக்கூடிய தெரு நாய்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எண்ணி அதனை கொல்லும் நோக்கில் உணவில் விஷம் வைப்பது, உடலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றுவது என தொடர்ந்து நடைபெற்று வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து உயிரிழந்து கிடந்த நாயின் உடலை பத்திரப்படுத்தி ரோட்டின் ஓரத்தில் வைத்திருந்தனர்.

அடுத்தநாள் இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்த கொடூர செயலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்து கிடந்த நாயின் உடலை பார்த்தபோது அங்கு நாயின் உடல் இல்லாததால் அதிர்ச்சிடைந்த விலங்கு நல ஆர்வலர்கள் அருகில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு நபர்கள் இரவோடு இரவாக கொலை செய்யப்பட்டு கிடந்த நாயின் உடலை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இது போன்று கொடூர புத்தி கொண்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை நாயின் உடல் மீது கொட்டி கொலை செய்த நபர்கள் அதனை இரவோடு இரவாக மறைப்பதற்கு டெம்போ வேனில் எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இதே பகுதியில் நண்பன் நாய் உயிரிழந்த சோகத்தில் ஒரு நாள் முழுவதும் அதன் உடல் அருகிலேயே அமர்ந்து நட்பு என்பது சேர்ந்து ஓடுவதில் மட்டுமில்லை கடைசி பயணம் முடியும் வரை துணையாக நிற்பது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மயானம் வரை சென்று நட்பு நண்பனான தெரு நாய் மணி என்பது நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *