Headlines

தொடரும் விசவாயு பலிகள் : சென்னை அருகே தந்தை, மகன் உயிரிழப்பு

தொடரும் விசவாயு பலிகள் : சென்னை அருகே தந்தை, மகன் உயிரிழப்பு

சென்னை சவுகார்பேட்டையில் வீட்டு கிணற்றை சுத்தம் செய்த தந்தை,மகன் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது்

சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் வீட்டில் உள்ள கிணற்றை சுத்தம் செய்து, அதில் தேங்கியிருந்த வண்டல் மண்ணை அகற்றும் பணியில் திருவண்ணாமலையை சேர்ந்த ரவி மற்றும் அவரது மகன் அய்யனார் ஈடுபட்டிருந்தனர்.

ரவி தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டு வழியாக கிணற்றுக்குள் இறங்கி வண்டல் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது கிணற்றுக்குள் இருந்த விஷவாயு தாக்கியதில் அவர் மயங்கி கிணற்று நீரில் விழுந்தார்.

இதனைப் பார்த்த அவரது மகன் அய்யனார், தந்தையை காப்பாற்றுவதற்காக தற்காலிக படிக்கட்டு வழியாக கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது அவரும் விஷவாயுவை சுவாசித்ததில் மயங்கி கிணற்றுக்குள் விழுந்தார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சுவாசக் கருவிகள் மற்றும் பாதுகாப்பு முகக்கவசங்களை அணிந்து கிணற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்டனர். பின்னர் இருவரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக யானைகவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *