திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு, பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி வசந்தா (60). செல்வம் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், குடும்பச் செலவுகளுக்காக வசந்தா அதே பகுதியில் சிறிய அளவில் இட்லி வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இவரது மகளின் மருத்துவ செலவிற்காக, வங்கியில் உள்ள பணத்தை எடுக்க சென்ற போது, வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக, வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தா வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதற்கான காரணம் குறித்து, வங்கி ஊழியர்களிடம் கேட்ட போது, சேலத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து தபால் வந்ததுள்ளதுள்ளதாகவும், அதில் வசந்தா பெயரில் 91 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரி பாக்கி உள்ளதாகவும், அதனை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அதனால் வங்கி கணக்கை முடக்கி வைத்துள்ளதாக, வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அன்றாட வாழ்வாதாரத்திற்காகவும் அவசரத் தேவைகளுக்காகவும் அவர் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கூட எடுக்க முடியாமல், கடும் துயரத்துக்கு ஆளாகியுள்ளார்,மேலும் மூதாட்டி வசந்தா இதுகுறித்து, கூறியபோது, தனது ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி, போலி நிறுவனம் தொடங்கி இந்த ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மோசடியை செய்துள்ளதகவும், மேலும் “குறிப்பிட்ட போலி நிறுவனத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும் எனது பெயரில் மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, முடக்கப்பட்ட எனது வங்கிக் கணக்கை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என அவர் கண்ணீர் மல்க தெரிவத்தார்.
மேலும் இதுகுறித்து வசந்தா திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கூலி தொழிலாளிகளை குறி வைத்து இது போன்று ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை செய்து, ஜி.எஸ்.டி வரிஏய்ப்பு கும்பலை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
