2027 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
2027 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செய்யும் பயணிகளுக்கு
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சார்பில் மாவட்டம் தோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சவுதி அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளின்படி சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நடைபெற்றது.
இந்த முகாமில் ஹஜ் பயணிகளுக்கு சர்க்கரை அளவு,ரத்த அழுத்த பரிசோதனை, கல்லீரல், சிறுநீரக செயல் திறன், மார்பக எக்ஸ்ரே, இ.சி.ஜி, கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் முதல் நாளான இன்று 55 பேர் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். சபியுல்லா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
