Headlines

ஒரே டூவிலரில் 4 பேர் பயணம் – போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஒரே டூவிலரில் 4 பேர் பயணம் - போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி கோவை சாலை தங்கமுத்து மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது ஒருவர்
அமர்ந்து கொண்டு
நான்கு இளைஞர்கள்
பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களின் இந்த செயலால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக சக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதுவும் கோவை – பொள்ளாச்சி சாலையில் அதிகளவில் வாகன போக்குவரத்து இருக்கும். பரபரப்பான இந்த சாலையில்
இது போன்று போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணம் செய்வது ஆபத்தானது என தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *